கூட்டணியில் வைகோ இருக்கிறாரா என்பதை திமுகவில் இருப்பவர்களே உறுதி செய்யவில்லை - தமிழிசை சௌந்தரராஜன்
கூட்டணியில் வைகோ இருக்கிறாரா என்பதை திமுகவில் இருப்பவர்களே உறுதி செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் செய்தியார்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும், அவர்களது கோரிக்கைகளை முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும். கஜா புயல் பாதித்த இடங்களில் நிவாரண பணிகள் நடைபெறுவதால் 20 தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம்.
திமுகவுடன் இன்று இருப்பவர்கள் தொடர்ந்து இருப்பார்களா என்ற சந்தேகம் இருக்கிறது. பிரதமர் மோடியின் அதிகாரத்தை பறிக்க நினைக்கும் வைகோவின் எண்ணம் கனவில் கூட நிறைவேறாது. கூட்டணியில் வைகோ இருக்கிறாரா என்பதை திமுகவில் இருப்பவர்களே உறுதி செய்யவில்லை.
பிரதமர் மோடியை அரசியல் நாகரீகமின்றி வைகோ ஒருமையில் விமர்சித்தது கண்டிக்கத்தக்கது பாஜக பலமான கூட்டணி அமைக்கும். திமுக கூட்டணி பலமாக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story