மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருக்கும்போது கவர்னர் அத்துமீறி செயல்படுகிறார் வைகோ குற்றச்சாட்டு
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருக்கும்போது கவர்னர் அத்துமீறி செயல்படுகிறார் வைகோ குற்றச்சாட்டு
கோவில்பட்டி,
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருக்கும்போது தமிழகத்தில் கவர்னர் அத்துமீறி செயல்படுகிறார் என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருக்கும்போது, கவர்னர் பன்வாரிலால் புரோகித் அத்துமீறி செயல்படுகிறார். மாவட்டம் தோறும் ஆட்சியாளர்களை அழைத்து பேசுகிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தலைமை நீதிபதி, பரிந்துரை செய்தும், கவர்னர் அதை செய்யாமல் காலதாமதப்படுத்துகிறார். அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ்சில் தீ வைக்கப்பட்டதில் 3 மாணவிகள் கருகி உயிர் இழந்தனர். இதில் சிறை தண்டனை பெற்ற அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேரை கவர்னர் விடுதலை செய்துள்ளார். ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் 27 ஆண்டுகளுக்கு மேலாக தவிக்கும் அப்பாவி தமிழர்கள் 7 பேரை விடுதலை செய்ய ஏன் மறுக்கிறார்?
இதனை கண்டித்து சென்னையில் நாளை (அதாவது இன்று) நடக்கும் போராட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சிகள், 70 அமைப்புகள் பங்கேற்கின்றன. இதில் பொதுமக்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டும். நாங்கள் அனுமதி கேட்ட இடம் வரை செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை என்றால், மெரினா, ஜல்லிக்கட்டு போன்று மிகப்பெரிய போராட்டமாக மாறும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
Related Tags :
Next Story