ஜாக்டோ- ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை,
புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தவேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்கவேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4-ந்தேதி (நாளை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ‘ஜாக்டோ-ஜியோ’ அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், டிசம்பர் 10 ஆம் தேதி அரையாண்டுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை, திங்கள் கிழமை வரை போராட்டத்தை ஒத்திவைக்கப்படுமா? என ஜாக்டோ ஜியோ தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது.
இதையடுத்து, தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஜாக்டோ ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ கோரிக்கை குறித்து எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக வரும் 10 ஆம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story