"படேல் சிலை உயிரற்ற சிலை என்றால், பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா?" கனிமொழிக்கு ஹெச்.ராஜா கேள்வி
"படேல் சிலை உயிரற்ற சிலை என்றால், பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா? என்று கனிமொழிக்கு ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
அண்மையில் திறக்கப்பட்ட் படேல் சிலை குறித்து, திமுக எம்.பி கனிமொழிக்கும், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.
கனிமொழி எம்.பி, தனது சமூக வலைதளப் பக்கத்தில், உயிரற்ற பட்டேல் சிலைக்கு மூன்றாயிரம் கோடி செலவு செய்த மத்திய அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 350 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளது என்ற பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
கனிமொழியின் படேல் சிலை பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக ஹெச். ராஜாவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "படேல் சிலை உயிரற்ற சிலை என்றால், தமிழகத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா?" என்று கனிமொழிக்கு ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றூக் கணக்கான ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா @KanimozhiDMK
— H Raja (@HRajaBJP) December 3, 2018
Related Tags :
Next Story