ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரூ.89 கோடி பட்டுவாடா பட்டியல் வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி
ஆர்கே நகர் தேர்தலின்போது ரூ.89 கோடி பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த பட்டியல் பறிமுதல் வழக்கில் ஐகோர்ட் அடுக்குக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது
சென்னை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பெயர்ப்பட்டியல் தொடர்பாக தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்திருந்தது . இந்த நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யபட்டதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது
ஆர்கே நகர் தேர்தலின்போது ரூ.89 கோடி பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த பட்டியல் பறிமுதல் வழக்கில் ஐகோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.
விசாரணைக்கு உத்தரவிட்டும் போலீஸ் இணை ஆணையர் ஏன் விசாரிக்கவில்லை என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் டிசம்பர் 12-ம் தேதிக்குள் பதில் தர காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனை நடத்தி ஓராண்டான நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
மேலும் பணப்பட்டுவாடா வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்த நரசிம்மன் யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. ரூ 89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு விசாரணையை கண்காணித்து அறிக்கை அளிக்கும் உத்தரவை அமல்படுத்தாதது ஏன்?" என்றும் கேள்வி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
டிசம்பர் 17ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பின்னர் வழக்கு விசாரணை டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்க்ப்பட்டது.
Related Tags :
Next Story