மதுரையில் டிசம்பர் 10 முதல் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை; உயர் நீதிமன்ற கிளை உத்தரவு


மதுரையில் டிசம்பர் 10 முதல் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை; உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
x
தினத்தந்தி 3 Dec 2018 5:14 PM IST (Updated: 3 Dec 2018 5:14 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் டிசம்பர் 10 முதல் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை,

மதுரையில் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதன்மீது இன்று விசாரணை நடந்தது.  இதில் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் கொண்ட அமர்வு நடத்திய விசாரணையில், வருகிற டிசம்பர் 10ந்தேதி முதல் மதுரையில் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதிக்க உத்தரவிட்டனர்.

இந்த தடை உத்தரவை அமல்படுத்தும்படி மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவும் பிறப்பித்து உள்ளனர்.

இந்த தடையை மீறினால் ரூ.500 அபராதமும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story