சென்னை அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை
சென்னை அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு .நாளை மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் சென்னையில் நுங்கம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், சேப்பாக்கம், விருகம்பாக்கம், பெரம்பூர், கொடுங்கையூர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தரமணி, போரூர், வேளச்சேரி, திருவல்லிக்கேணி, ஆதம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெருங்குடி, கிண்டி, பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம்,மாமல்லபுரம்,திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நாகை மாவட்டம் சீர்காழி,கொள்ளிடம்,பூம்புகார்,தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. புதுச்சேரி, காலாப்பேட், திருபுவனை, அரியாங்குப்பம்,தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
Related Tags :
Next Story