தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் ஆளுநர் மாற்றப்படுவார் - வைகோ


தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் ஆளுநர் மாற்றப்படுவார் - வைகோ
x
தினத்தந்தி 3 Dec 2018 1:27 PM GMT (Updated: 2018-12-03T18:57:10+05:30)

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் ஆளுநர் மாற்றப்படுவார் என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கைதாகி விடுதலையான பின்னர் வைகோ செய்தியார்களிடம் கூறியதாவது:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய உடனே ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் ஆளுநர் மாற்றப்படுவார். 

இனி ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம், நிவாரண நிதி குறைவாக அளித்த பிரதமர் தமிழகம் வரும்போதும் கருப்புக்கொடி காட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story