சாக்கடையில் வீசப்பட்ட 5 மாத கரு போலீஸ் தீவிர விசாரணை


சாக்கடையில் வீசப்பட்ட  5 மாத கரு போலீஸ் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 3 Dec 2018 7:05 PM IST (Updated: 3 Dec 2018 7:05 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஐந்து மாதங்களே ஆன குழந்தை கரு ஒன்று சாக்கடையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

இன்று காலை, கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடையில், முழுவதும் வளர்ச்சிப் பெறாத குழந்தை கரு ஒன்று கிடந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

அங்கு வந்த காவல்துறையினர், அந்த கருவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கருவை பரிசோதித்த மருத்துவர்கள், அது உருவாகி ஐந்து மாதம் ஆகியிருக்கலாம் என்று தெரிவித்தனர். 

சாக்கடையில் அந்த கருவை வீசியது யார் என்பது குறித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story