ஜெயலலிதாவின் சொந்த ஊர் எது? தந்தி டி.வி.யில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் விசேஷ தகவல்கள்


ஜெயலலிதாவின் சொந்த ஊர் எது? தந்தி டி.வி.யில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் விசேஷ தகவல்கள்
x
தினத்தந்தி 5 Dec 2018 5:15 AM IST (Updated: 5 Dec 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

ஜெ.ஜெயலலிதா எனும் நான் என்ற பெயரில் தந்தி டி.வி.யில் கடந்த திங்கட்கிழமை முதல் புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜெயலலிதா பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத பல அரிய தகவல்கள் இடம் பெற்று உள்ளன.

வருகிற வெள்ளிக்கிழமை வரை தினமும் இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் ஜெயலலிதாவின் உறவினர்கள், நெருங்கி பழகிய நண்பர்கள் அவரை பற்றிய அரிய தகவல்களை மனம் திறந்து சொல்கிறார்கள்.

முதல் நாள் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் சித்தி மகள் அமீதா தெரிவித்த தகவல்கள் நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தன. போயஸ் கார்டனில் வேலைக்கார பெண்ணாக பணியாற்றிய ராஜம்மா, இனி எனக்கு யார் இருக்கிறார்கள் என்று கதறியது கண்ணீரை பெருக்கெடுக்க வைப்பதாக இருந்தது. கோடநாடு எஸ்டேட் ஜெயலலிதாவுக்கு பிடித்தமான இடங்களில் ஒன்றும், அங்கு ஓய்வெடுப்பதை அவர் மிகவும் விரும்புவார் என்பதும் சுவாரஸ்யம் கூட்டிய தகவல்.

இனிப்பின் மீது ஈர்ப்பு

2-ம் நாளான நேற்றைய நிகழ்ச்சியில், ஜெயலலிதா தனது இல்லத்தில் நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகளை கொண்டாடியது பற்றிய காட்சிகளும், ஜெயலலிதாவின் மகிழ்ச்சியான தருணங்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் விதமான காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. தன் இல்லத்தில் நுழைந்த பாம்புக்கு சற்றும் பயப்படாமல் ஜெயலலிதா இருந்த தகவல்களும் வியப்பை தருவதாக இருந்தது.

இனிப்புகள் மீது ஜெயலலிதா கொண்டிருந்த ஈர்ப்பு, பிரதமர் மோடிக்கு அவர் அளித்த சிறப்பு மதிய விருந்தின்போது நடந்த சம்பவங்களும் ருசிகரமாக தொகுக்கப்பட்டு இருந்தன.

சொந்த ஊர் எது?

ஜெயலலிதா பற்றி மிக சமீபத்தில் எழுந்த சர்ச்சை அவரது இயற்பெயர் கோமளவல்லியா? என்பது பற்றியது. ஜெயலலிதாவுக்கு அப்படி ஒரு பெயர் இருந்தது உண்மைதானா? பிரத்யேக ஆவணங்களுடன் உண்மையை வெளிக்கொண்டு வருகிறது 3-வது நாளான இன்று (புதன்கிழமை) தந்தி டி.வி.யில் ஒளிபரப்பாகும் ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ நிகழ்ச்சி.

ஜெயலலிதா தமிழர்தானா? அவர் தெலுங்கரா? கன்னடரா? ஜெயலலிதாவின் உண்மையான சொந்த ஊர் எது? என இதுவரை வெளிவராத முக்கிய தகவல்கள், ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்குமான வெளியுலகம் அறியாத முக்கிய தொடர்பு, ஜெயலலிதா குடும்பத்தின் உலகறியாத முதல் பெண் சாதனையாளர், ஜெயலலிதா தந்தையின் மர்ம மரணம், ஜெயலலிதாவின் முதல் மேடை, ஜெயலலிதா பெங்களூருவில் வளர்ந்த நாட்களின் சுவாரஸ்ய பக்கங்கள்... ஜெயலலிதா கண்ணீரோடு நினைவுகூரும் அவரது வாழ்வின் முக்கிய சொந்தம் என இதுவரை மறைந்திருக்கும் அரிய உண்மைகள் இன்றிரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ நிகழ்ச்சியில் காணலாம்.

இந்த நிகழ்ச்சி நாளை மாலை 5 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது.

Next Story