பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 5 Dec 2018 9:21 AM IST (Updated: 5 Dec 2018 9:21 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடைய செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 17- ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. 

கடந்த 13 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது. இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.74.41 காசுகள் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.09 காசுகள் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஏறத்தாழ இரு வாரங்களாக, தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று நேற்றைய விலையிலேயே விற்பனை ஆவதால், வாகன ஓட்டிகள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். 


Next Story