அமெரிக்க வாலிபரை சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 4 பேருக்கு சம்மன் விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவு
அமெரிக்க வாலிபர் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 4 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது நடந்த கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
இதுதொடர்பாக ஆலை தரப்பினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா ஓக்லாந்தை சேர்ந்த மார்க் சியல்லா (வயது 35) என்பவர் கடந்த 27-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்து, தனியார் ஓட்டலில் தங்கினார். அவர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் சிலரை நேரில் சென்று சந்தித்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராமங்களுக்கு மார்க் சியல்லா சென்று மக்களை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மார்க் சியல்லாவிடம் விசாரணை நடத்தினர். நேற்று காலை முதல் மதியம் வரை தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரித்தனர். அதன்பிறகு அவர் தங்கி உள்ள ஓட்டல் அறையில் வைத்து விசாரித்தனர். அப்போது, மார்க் சியல்லாவின் மடிக்கணினி, கேமரா மற்றும் அவருடைய பல்வேறு ஆவணங்களையும் பரிசோதனை செய்தனர். இந்த விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது.
விசாரணையில், மார்க் சியல்லா தான் நிறுவனம் சாராத எழுத்தர் (பிரீ லேன்சர்) என்றும், குறும்பட இயக்குனர் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் தெரிவித்த பல்வேறு தகவல்களை போலீசார் சேகரித்து உள்ளனர். அந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து குடியுரிமை பிரிவு மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் மார்க் சியல்லா தூத்துக்குடியில் சந்தித்து பேசியதாக கூறப்படும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 4 பேரிடம் நேற்று விசாரணை நடத்துவதற்காக போலீசார் அழைப்பாணை (சம்மன்) அனுப்பி இருந்தனர். ஆனால், அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும் காலஅவகாசம் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறியதாவது:-
அமெரிக்க வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் தெரிவித்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பாத்திமா பாபு, ராஜா, ரீகன், பிரின்ஸ் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் இன்று (அதாவது நேற்று) விசாரணைக்கு ஆஜராகவில்லை. காலஅவகாசம் கேட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story