திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்
திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் என்பது அதிமுகவுக்கு சர்க்கரை போன்றது; சிலருக்கு பாகற்காய் போன்றது . ஒரு காலத்தில் சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தது, இன்று நிலை என்ன?. சென்னையை போல் திருவாரூரிலும் வெற்றி பெறுவோம்.
சினிமாவுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது தமிழக அரசுதான். தமிழக அரசு எடுத்த முயற்சியால் 23 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது. இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். அரசு தேவை என கருதினால் சிலரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடும் என கூறினார்.
Related Tags :
Next Story