தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறும்


தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறும்
x
தினத்தந்தி 2 Jan 2019 1:05 PM IST (Updated: 2 Jan 2019 1:05 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்து உள்ளார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில்  முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களும், திமுக சார்பில் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் ஜனவரி 5,6 மற்றும் 8-ம் தேதிகளில் சட்டமன்ற கூட்டம் நடைபெறும்  என முடிவு எடுக்கப்பட்டது.  தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

Next Story