முதல் அமைச்சர் பழனிசாமியுடன் எம்.எல்.ஏ. கருணாஸ் திடீர் சந்திப்பு
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமியை எம்.எல்.ஏ. கருணாஸ் திடீரென இன்று சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார்.
கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
இந்த நிலையில், சபாநாயகர் தனபால் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி எம்.எல்.ஏ. கருணாஸ் பேரவை செயலாளரிடம் மனு அளித்திருந்தார்.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி அவர் கடிதம் அளித்து இருந்த நிலையில் அதனை திரும்பப்பெற்றார்.
இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமியை எம்.எல்.ஏ. கருணாஸ் திடீரென சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில், சிவகங்கையில் மருது பாண்டியர் சிலை அமைக்க இடம் ஒதுக்க கோரி முதலமைச்சர் பழனிசாமியிடம் கருணாஸ் மனு அளித்து உள்ளார் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story