சபரிமலைக்கு 2 பெண்கள் வேண்டுமென்றே சூழ்ச்சி செய்து சென்றுள்ளனர் - தமிழிசை சவுந்தரராஜன்
சபரிமலைக்கு 2 பெண்கள் வேண்டுமென்றே சூழ்ச்சி செய்து சென்றுள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சபரிமலை சன்னிதானத்தில் இன்று அதிகாலை பிந்து மற்றும் கனகதுர்கா ஆகியோர் தேவஸ்தான ஊழியர்கள் செல்லும் வழியாக சென்று வழிபாடு நடத்தினர். இதனையடுத்து நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைக்கு பின்னர் திறக்கப்பட்டது.
40 வயது மதிக்கத்தக்க பெண்கள், சபரிமலையில் வழிபாடு செய்ததை முதல்-மந்திரி பினராயி விஜயன் உறுதி செய்துள்ளார். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது:
சபரிமலைக்கு 2 பெண்கள் வேண்டுமென்றே சூழ்ச்சி செய்து சென்றுள்ளனர். அங்குள்ள ஆளும் கட்சியின் தூண்டுதலால் இது நடைபெற்றுள்ளது. திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 6-ம் தேதி முடிவு செய்யப்படும் என்றார்.
Related Tags :
Next Story