அண்ணாவின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்துவோம் - தி.மு.க. தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்


அண்ணாவின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்துவோம் - தி.மு.க. தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 Feb 2019 6:37 AM GMT (Updated: 2019-02-03T12:07:58+05:30)

அண்ணாவின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்துவோம் - தி.மு.க. தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை,

அண்ணாவையும், அவரது கொள்கைகளையும் பின்பற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்ணா மறைந்து அரை நூற்றாண்டு கடந்தாலும்  என்றென்றும் மக்களின் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்திருப்பதாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இணையில்லா எழுத்தாலும், ஈர்த்திடும் பேச்சாலும் அயராத உழைப்பாலும் , ஆளுமையாலும் தமிழ்மக்களிடம் விழிப்புணர்வை  ஊட்டியவர் அண்ணா என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் அண்ணா என்றும் அக்கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

'மாநில சுயாட்சி'க்கு முதன்முதலில் வித்திட்ட தலைவர்! இந்தியாவில் கூட்டாட்சி தத்துவம் எப்படி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான இலக்கணமாகத் திகழ்ந்தவர்!  சிந்தனையில் செறிவு! அணுகுமுறையில் எளிமை!

தலைவர் கலைஞரின் அண்ணன்! பேரறிஞர் அண்ணாவின் புகழை எந்நாளும் போற்றிடுவோம்! என பதிவிட்டுள்ளார்.

Next Story