40 தொகுதிகளுக்கும் மனு வாங்குவதால் தனித்துப்போட்டியா? -ஜெயக்குமார் விளக்கம்


40 தொகுதிகளுக்கும் மனு வாங்குவதால் தனித்துப்போட்டியா? -ஜெயக்குமார் விளக்கம்
x
தினத்தந்தி 4 Feb 2019 12:37 PM IST (Updated: 4 Feb 2019 12:44 PM IST)
t-max-icont-min-icon

40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறுவதால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என கூற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மக்களவை தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்களவைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு மனு விநியோகம் நடைபெற்று வருகிறது.

40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறுவதால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என கூற முடியாது. கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீட்டிற்கு பின் மனுக்களை வாபஸ் பெறுவது வழக்கம். தேசியக்கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். தேசியக்கட்சிகள் என்றால் பாஜக மட்டுமல்ல, பல கட்சிகள் உள்ளன.

மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. வரையறை தாண்டி மேற்கு வங்க அரசோ, சிபிஐ அமைப்போ செயல்பட்டால் அது தவறு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story