எந்த பக்கம் சாயும் தே.மு.தி.க; கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் ஆலோசனை இன்று அல்லது நாளை முடிவு


எந்த பக்கம் சாயும் தே.மு.தி.க; கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் ஆலோசனை இன்று அல்லது நாளை முடிவு
x
தினத்தந்தி 1 March 2019 11:38 AM IST (Updated: 1 March 2019 11:38 AM IST)
t-max-icont-min-icon

தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று அல்லது நாளை கூட்டணி பற்றி முடிவு தெரியும் என கூறப்படுகிறது.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலை அதீத பலத்துடன் எதிர்கொள்ள தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தே.மு.தி.க. இரண்டு பக்கமும் போக்குகாட்டுவதால், கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலையில் இரு கட்சிகளும் இருந்து வருகின்றன.

மார்ச் 1-ந் தேதியை (இன்று) தி.மு.க.வும், மார்ச் 5-ந் தேதியை அ.தி.மு.க.வும் சுட்டிக்காட்டி, அதற்குள் கூட்டணி முடிவை அறிவிக்குமாறு தே.மு.தி.க.வுக்கு கெடு விதித்துள்ளன. தி.மு.க.வின் கெடு இன்றுடன் முடிவடைய உள்ள  நிலையில், தே.மு.தி.க. நல்ல முடிவை எடுத்து அறிவிக்கும் என்று அக்கட்சியினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

காரணம், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா ‘சீட்’டும் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அளவு தொகுதிகளை அ.தி.மு.க.வும் வழங்குவதாக ஏற்கனவே தெரிவித்திருந்ததால், இந்தப் பக்கமா?, அந்தப் பக்கமா? என்று தே.மு.தி.க. யோசித்துக் கொண்டிருந்தது. 

இன்று அல்லது  நாளை மாலைக்குள் கூட்டணி குறித்து தே.மு.தி.க முடிவு செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தே.மு.தி.க.  அலுவலகத்திற்கு இன்று காலை விஜயகாந்த் வருகை தந்தார். கூட்டணி குறித்து பேச அமைக்கப்பட்ட குழுவுடன் விஜயகாந்த் ஆலோசனை  நடத்தினார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு முதல்முறையாக விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு சென்று உள்ளார்.

Next Story