பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசம் - ப.சிதம்பரம் சாடல்


பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசம் - ப.சிதம்பரம் சாடல்
x
தினத்தந்தி 2 March 2019 7:31 PM IST (Updated: 2 March 2019 7:31 PM IST)
t-max-icont-min-icon

பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசமாக உள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:

தேசிய அளவில் வேலையில்லா பட்டதாரிகள் குறித்த விவரத்தை கூட தேசிய புள்ளியல் துறை வெளியிட விடாமல் அரசு தடுக்கிறது. காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி மக்களின் மனதை பிடிப்பதே. 

பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசமாக உள்ளது. 9,10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பொருளாதாரம் குறித்த பாடத்தை சேர்க்க வேண்டும். நான் நினைப்பதை வெளிப்படையாக சொல்ல முயன்ற ஒரே இடம் எழுத்து மட்டும் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story