தமிழாற்றுப்படை வரிசையில் அண்ணா பற்றி கவிஞர் வைரமுத்து இன்று கட்டுரை அரங்கேற்றுகிறார் காஞ்சீபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள்


தமிழாற்றுப்படை வரிசையில் அண்ணா பற்றி கவிஞர் வைரமுத்து இன்று கட்டுரை அரங்கேற்றுகிறார் காஞ்சீபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 3 March 2019 3:57 AM IST (Updated: 3 March 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

தமிழுக்கு முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளாகக் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார்.

சென்னை,

இதுவரை தொல்காப்பியர், அவ்வையார், கபிலர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், ஜெயங்கொண்டார், கம்பர், அப்பர், ஆண்டாள், திருமூலர், வள்ளலார், உ.வே.சாமிநாதையர், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், கலைஞர், மறை மலையடிகள், புதுமைப்பித்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன், அப்துல் ரகுமான் என்று 22 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார்.

23-ம் ஆளுமையாக அறிஞர் அண்ணாவை ஆய்வு செய்து அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் அரங்கேற்ற இருக்கிறார். இன்று (3-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு காஞ்சீபுரம், செவிலிமேடு, சுகுமாரி திருமண மண்டபத்தில் விழா நடைபெறுகிறது.

உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் விழாவுக்கு தலைமை ஏற்கிறார். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த் துரை வழங்குகிறார்கள்.

அறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு தமிழன்பர்கள் மலரஞ்சலி செய்கிறார்கள். அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சீபுரத்திலேயே அண்ணா தொடர்பான ஆய்வுக்கட்டுரை அரங்கேறுவதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Next Story