திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு


திமுக கூட்டணியில்  விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள்  ஒதுக்கீடு
x
தினத்தந்தி 4 March 2019 11:21 AM IST (Updated: 4 March 2019 1:15 PM IST)
t-max-icont-min-icon

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி ஏற்பட்டு உள்ளது. தே.மு.தி.க.வையும், த.மா.கா.வையும் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க. முயற்சி எடுத்து வருகிறது. 

அதேசமயம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இதில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ம.தி.மு.க.,  கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று  திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அண்ணா அறிவாலயம் வருகை தந்தார். விசிக தலைவர் திருமாவளவனுடன் திமுக 2ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்த நடைபெற்றது.

2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது. சிதம்பரம் தவிர விழுப்புரம், திருவள்ளூர் இந்த தொகுதிகளில் ஒன்றும் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி தொகுதி பங்கீடும் இன்று இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

Next Story