விமானப்படை தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை கணக்கிட முடியாது - விமானப்படை தலைமை தளபதி
பயங்கரவாதிகளின் முகாமில் விமானப்படை நடத்திய தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை கணக்கிட முடியாது என விமானப்படை தலைமை தளபதி பி.எஸ். தனோவா கூறி உள்ளார்.
கோவை,
பயங்கரவாதிகளின் முகாம் மீதான தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக கோவை சூலூரில் விமானப்படை தலைமை தளபதி பி.எஸ். தனோவா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளின் முகாமில் எத்தனை பேர் இருந்தனர், எவ்வளவு பேர் இறந்தனர் என்பதை நம்மால் கணக்கிட முடியாது.
இந்திய விமானப்படை இலக்கை சரியாகவே தாக்கி உள்ளது. நாம் இலக்கை சரியாக தாக்கியதால் தான் அவர்கள் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மிக் விமானங்களை ஏன் பயன்படுத்தக்கூடாது. மிக் விமானங்கள் பழைய விமானங்கள் அல்ல, அவை நவீனமயமாக்கபட்டவை. நவீனப்படுத்தப்பட்டுள்ளதால் தான் பாகிஸ்தானின் F-16க்கு எதிராக இந்தியாவின் மிக்-21 போர் விமானம் பயன்படுத்தப்பட்டது .
விங் கமாண்டர் அபிநந்தனின் உடல் தகுதி உறுதிபடுத்தப்பட்ட பின்னரே அவர் பணியில் சேர்க்கப்படுவார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அபிநந்தன் மீண்டும் விமானத்தை இயக்குவாரா என்பது தெரிய வரும்.
செப்டம்பர் மாதத்தில் ரபேல் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story