மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஏற்பட்டு உள்ளது. தே.மு.தி.க.வையும், த.மா.கா.வையும் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க. முயற்சி எடுத்து வருகிறது.
அதேசமயம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இதில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.முக ஆகிய கட்சிகள் 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இதில் விடுதலை சிறுத்தைகள் ,மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியானது தி.மு.க. கூறிய தொகுதி எண்ணிக்கை பற்றி நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறி உள்ளது.
இதனிடையே மக்களவை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி-திமுக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து,
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட தயார் என மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தோம். விருப்பமான தொகுதியாக கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டுள்ளோம் என்றார்.
Related Tags :
Next Story