தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால் இந்தியா நடவடிக்கை எடுத்தது - நிர்மலா சீதாராமன்


தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால் இந்தியா நடவடிக்கை எடுத்தது - நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 5 March 2019 10:06 AM GMT (Updated: 5 March 2019 10:06 AM GMT)

தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால் இந்தியா நடவடிக்கை எடுத்தது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

சென்னை,

பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டையை 10 தொழிலாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், நிலோபர் கபில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிர்மலா சீதாராமன்  கூறியதாவது:-

பலமுறை வலியுறுத்தியும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததாலேயே தீவிரவாத முகாமை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அபிநந்தன் மீண்டும் போர் விமானம் இயக்குவாரா என்பது குறித்து மருத்துவர்களும், விமானப்படை அதிகாரிகளும் முடிவெடுப்பார்கள் . தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால் இந்தியா நடவடிக்கை எடுக்கிறது.

தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அழிக்கப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை தொடர்பாக வெளியுறவு செயலர் கூறியதுதான் அரசின் கருத்து.

விமானப்படை தாக்குதலுக்கு சேட்டிலைட் படம் ஆதாரம் உள்ளதா என்பதை கூற இயலாது என்று கூறினார்.

Next Story