நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் பெறவே தமிழக அரசு ரூ.2 ஆயிரம் நிதி வழங்குகிறது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு சிறப்பு நிதியாக வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள சுமார் 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகின்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.1,200 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளிவர இருக்கிற ஒரு சில நாட்களுக்கு முன்பாக வாக்காளர்களை கவர்ந்து வாக்குகள் பெறவே இந்தத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. நிதியில் இருந்து வாக்காளர்களின் வாக்குகளைப் பெற கொடுக்கப்படுகிற நிதிக்கு பதிலாக அரசு நிதியில் இருந்தே வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்பதைவிட கொடூரமான நிகழ்வு வேறு எதுவும் இருக்க முடியாது.
கடந்த பல ஆண்டுகளாக தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காத மக்கள் விரோத அ.தி.மு.க. அரசும், மத்திய அரசும் இணைந்து இத்தகைய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் சேர்ந்து நடந்தால், அதில் மத்திய-மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் அ.தி.மு.க.வின் கவர்ச்சித் திட்டங்களால் மக்கள் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் உறுதியாக செயல்படுவார்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story