பிரதமர் பங்கேற்கும் பரப்புரை மேடையில் இருந்து விஜயகாந்த், ஜிகே வாசன் படங்கள் அகற்றம்
பிரதமர் பங்கேற்கும் பரப்புரை மேடையில் இருந்து விஜயகாந்த், ஜிகே வாசன் படங்கள் அகற்றப்பட்டது.
சென்னை,
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அதிமுக - பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு பரப்புரையை தொடங்குகிறார். இந்த பொதுக்கூட்டத்துக்காக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் படம் இடம்பெறவில்லை.
இந்த நிலையில் இன்று நடைபெறும் பிரச்சார பொதுகூட்ட மேடையில் தேமுதிக விஜயகாந்த் படமும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் படமும் இடம்பெற்று உள்ளது. இதனால் அ.தி.மு.க- தே.மு..தி.க கூட்டணி உறுதியானதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீர் என்று பிரதமர் பங்கேற்கும் பரப்புரை மேடையில் இருந்து விஜயகாந்த், ஜிகே வாசன் படங்கள் அகற்றப்பட்டது.
Related Tags :
Next Story