இறையாண்மையை காக்க வலிமை மிக்க பிரதமராக மீண்டும் மோடியை அமர வைப்போம் - ஓ.பன்னீர்செல்வம்
இறையாண்மையை காக்க வலிமை மிக்க பிரதமராக மீண்டும் மோடியை அமர வைப்போம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை,
சென்னை கிளாம்பாக்கத்தில் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது கூறியதாவது;-
ஓய்வின்றி உழைத்து 40 தொகுதிகளிலும், 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம். தீய சக்திகளை அழிக்கவே அதிமுக வெற்றி கூட்டணியை அமைத்துள்ளது.
யார் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க தைரியம் இல்லாத ஸ்டாலின், அதிமுக கூட்டணியை விமர்சிக்கிறார். ஜெயலலிதா மறைந்த போது மத்திய அரசு நமக்கு தோள் கொடுத்து துணையாக இருந்தது.
மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும் என்று நாடே சொல்கிறது. இந்திய இறையாண்மையை காக்க வலிமை மிக்க பிரதமராக மீண்டும் மோடியை அமர வைப்போம் என கூறினார்.
Related Tags :
Next Story