மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி அமையப்போவது உறுதி -ஸ்டாலின் பேச்சு


மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி அமையப்போவது உறுதி -ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 6 March 2019 2:51 PM GMT (Updated: 2019-03-06T20:21:19+05:30)

திமுக தென்மண்டல மாநாட்டில் பேசிய ஸ்டாலின், மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலான ஆட்சி அமையப்போவது உறுதி என்று பேசினார்.

சென்னை,

தி.மு.க. சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல மாநாடு விருதுநகரில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. 

திமுக தென்மண்டல மாநாட்டில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

காங்கிரசுடன் இந்திரா காந்தி காலம் முதல் கூட்டணி வைத்துள்ளோம், எங்களை சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்லும் பிரதமர் மோடி வைத்திருக்கும் கூட்டணி என்ன விதமான கூட்டணி? நாட்டிற்கு ஆபத்து வரும்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.

பிரதமர் மோடி ஆட்சியில் விலைவாசி குறந்துள்ளதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பார் என்று ஓபிஎஸ் கூறியது மிகப்பெரிய பொய், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் கூட்டணி வைத்திருக்க மாட்டார்.

விலைவாசி உயர்ந்துள்ளதாக திமுகவின் ஊராட்சி சபை கூட்டங்களில் மக்கள் கூறுகிறார்கள். அரசின் உதவித்தொகையை முறையாக கொடுத்தால் திமுக ஏன் தடுக்கப்போகிறது. தேர்தல் நெருங்குவதால் தான் விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தான் என் குடும்பம் என்று கூறும் பிரதமர் மோடி, அவர்களுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. 130 கோடி நாட்டு மக்கள் தான் என் குடும்பம் என்று குமரி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அந்த மக்களுக்கு என்ன செய்தார்? ஜிஎஸ்டி, கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலைஉயர்வு இதுதான் பிரதமர் செய்த சாதனை.

திமுக கூட்டணியுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்போகும் வரலாறு மீண்டும் திரும்புகிறது. மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலான ஆட்சி அமையப்போவது உறுதி. தமிழக அரசியலில் 2 முதல்-அமைச்சர்களை தந்த மாவட்டம் விருதுநகர்.

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். தமிழக இளைஞர்களுக்கு மோடி அரசு துரோகம் செய்கிறது.

அதிமுக ஆட்சிக்கும் பாஜக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்த கூட்டம் ஒரு தொடக்கப்புள்ளி. திமுக கூட்டணியுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்போகும் வரலாறு மீண்டும் நடக்கப்போகிறது. மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி அமையப்போவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story