திருவாரூரில் ஆய்வு; 5க்கும் மேற்பட்ட சிலைகள் மாற்றம்: பொன். மாணிக்கவேல்
திருவாரூரில் நடந்த ஆய்வில் 5க்கும் மேற்பட்ட சிலைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன என பொன்.மாணிக்கவேல் தெரிவித்து உள்ளார்.
திருவாரூர்,
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கடந்த வருடம் நவம்பர் 30ந்தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற இருந்த நிலையில், ஐகோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதாவது சி.பி.ஐ.க்கு வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணையை சட்டவிரோதம் என்று கூறி ரத்து செய்ததோடு, ஓய்வு பெறும் பொன். மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது.
இதனை அடுத்து, பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக தொடர்ந்து செயல்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதுபற்றி அவர் கூறும்பொழுது, திருவாரூரில் 1,897 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 5க்கும் மேற்பட்ட சிலைகள் மாற்றப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது என்று கூறினார்.
Related Tags :
Next Story