“தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பணியாற்ற வேண்டியது கடமை” அதிமுகவில் மீண்டும் இணைந்த கே.சி.பழனிசாமி பேட்டி
தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பணியாற்ற வேண்டியது கடமை என்று அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீண்டும் கட்சியில் இணைந்தார். கடந்த 2018-ல் கே.சி.பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீண்டும் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.
அதிமுகவில் மீண்டும் இணைந்தது குறித்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
காலங்கள் மாறுவது போல கட்சியின் தலைமைகள் மாறும். தேர்தல் காலத்தில் மனவேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக பணியாற்ற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட விருப்பமனு அளிக்கவில்லை, நான் போட்டியிட மாட்டேன்.
தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பணியாற்ற வேண்டியது கடமை என்பதால் இணைந்து பணியாற்றுகிறேன். ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது வைத்த குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறமாட்டேன். வருத்தங்களை ஒதுக்கிவிட்டு தேர்தல் பணியாற்ற விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story