“எங்கள் கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலின் மிரண்டு போய் இருக்கிறார்” தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
“எங்கள் கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலின் மிரண்டு போய் இருக்கிறார்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தூத்துக்குடி,
“எங்கள் கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலின் மிரண்டு போய் இருக்கிறார்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தூத்துக்குடி 1-ம் கேட் காந்தி சிலை பகுதியில் பா.ஜனதா கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நல்ல கூட்டணி
தற்போது நாங்கள் அமைத்துள்ள கூட்டணி நல்ல கூட்டணியாக இருக்கிறது. ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில், எதிர்க்கட்சிகளை மிரட்டி கூட்டணி அமைத்து இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. நாங்கள் நல்ல கட்சிகளை திரட்டி கூட்டணி அமைத்து உள்ளோம்.
மிரண்டு போய் இருக்கிறார்
எங்கள் கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலின் மிரண்டு போய் இருக்கிறார். மு.க.ஸ்டாலின் எதிர் கூட்டணியை விமர்சனம் செய்வதிலேயே இருக்கிறாரே தவிர மக்களுக்கு நல்லது செய்வோம் என்று ஒரு நாளும் சொல்வது இல்லை. இவர் எப்போதும் பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜனதா கட்சியையும் விமர்சனம் செய்து வருகிறார். எனவே மக்கள் அவரையும், அவரது கூட்டணி கட்சிகளையும் நம்ப போவது இல்லை.
மக்களுக்கு நல்லது செய்யும் கூட்டணியாக பா.ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி அமைந்து உள்ளது. நான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும். கட்சி அறிவித்தால் நான் தூத்துக்குடியில் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story