பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் மனித சங்கிலி போராட்டம்


பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 9 March 2019 11:47 AM GMT (Updated: 2019-03-09T17:17:54+05:30)

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது.

சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 வருடங்களாக சிறையில் இருக்கின்றனர். சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்தி அவர்களை மாநில அரசு விடுவிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.

ஆனால் சட்டப்பேரவை தீர்மானம், அனைத்துக் கட்சிகளின் குரல், தமிழக மக்களின் குரல் என எதையுமே கண்டுகொள்ளாமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுவரை மௌனம் சாதித்து வருகிறார். 

இதற்கிடையே,  7 பேரின் விடுதலையை வலியுறுத்தி சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்துக்கு  பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அழைப்பு விடுத்திருந்தார். 

இதனையடுத்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மனிதச்சங்கிலி போராட்டம் இன்று தொடங்கியது. இந்த போராட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பங்கேற்றுள்ளார். திராவிடர் கழகம், திருமாவளவன், இடதுசாரிகள், திராவிடர் விடுதலைக்கழகம், இஸ்லாமிய அமைப்புகள் இதில் பங்கேற்றுள்ளன.  

அமமுகவின் வெற்றிவேல், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். புதுச்சேரி,சேலம், மதுரை, கோவை  உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மத்தியிலும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு வலுத்துள்ளது.

Next Story