கோரிக்கைகளை திமுகவிடம் தெரிவித்துள்ளோம் - மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
கோரிக்கைகளை திமுகவிடம் தெரிவித்துள்ளோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
மக்களவை தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை இறுதி செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்தது. சிபிஐ, சிபிஎம் ஆகிய இருகட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்தது.
இந்நிலையில், மக்களவை தேர்தலின் தொகுதி பங்கீடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொகுதிப்பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திமுக கூட்டணியில், இந்திய கம்யூ. கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்திய கம்யூ. கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,
பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது, நாளை அல்லது நாளை மறுநாள் முடிவு எட்டப்படும். தொகுதிகள் குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கோரிக்கைகளை திமுகவிடம் தெரிவித்துள்ளோம். மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை இறுதி செய்ய திமுக தொகுதிப் பங்கீட்டுக்குழுவுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்.
முத்தரசன் கூறுகையில்,
திமுக தொகுதிப்பங்கீட்டுக்குழுவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றார்.
Related Tags :
Next Story