தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வரும் என்று இன்னமும் நம்பிக்கை இருக்கிறது -பொன்.ராதாகிருஷ்ணன்
தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வரும் என்று இன்னமும் நம்பிக்கை இருக்கிறது என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுக-பாஜக கூட்டணியை பிளவுபடுத்த பலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதிமுக-பாஜக கூட்டணியை பிளவுபடுத்த முயற்சி நடப்பதாக முதலமைச்சர் கூறிய கருத்தில் உண்மை உள்ளது.
எங்கள் கூட்டணியை பிளவுபடுத்த நடைபெறும் முயற்சி தோல்வியை சந்திக்கும். எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. திமுக கூட்டணியில் நால்வர் அணி இருக்கும் நிலையில் அவர்களே அந்த வேலையை செய்வார்கள்.
திமுகவை தாக்கு தாக்கு என தாக்கிய வைகோ தற்போது தாங்கு தாங்கு என தாங்குகிறார். எங்கள் கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story