ஜெயலலிதாவை பார்த்து விஜயகாந்த் நாக்கை துருத்தியதே தே.மு.தி.க. வீழ்ச்சிக்கு காரணம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேட்டி


ஜெயலலிதாவை பார்த்து விஜயகாந்த் நாக்கை துருத்தியதே தே.மு.தி.க. வீழ்ச்சிக்கு காரணம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 10 March 2019 4:00 AM IST (Updated: 10 March 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் தே.மு.திக. பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை, 

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் தே.மு.திக. பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது சட்டசபையில் ஜெயலலிதாவை எதிர்த்து குரல் எழுப்பியவர் விஜயகாந்த் என்றும், அக்கட்சியை சேர்ந்த 37 எம்.பி.க்கள் இருந்தும் தமிழகத்துக்கு நல்ல திட்டங்கள் கிடைக்காமல் போய் விட்டது எனவும் விமர்சனம் செய்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது-

37 எம்.பி.க்களால் பலனில்லை என்று பிரேமலதா சொல்வது அவருடைய சொந்த கருத்து. தே.மு.தி.க.வை தமிழ்நாடே பார்க்கிறது. இங்கொன்றும், அங்கொன்றும் என தே.மு.தி.க. இரு பக்கமும் பேசுகின்றது. தே.மு.தி.க. இரு கட்சிகளுடனும் பேசியது மிகப்பெரிய தவறு. நாகரிகம் தெரியாமல் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து விஜயகாந்த் நாக்கை துருத்தியதே தே.மு.தி.க. வீழ்ச்சிக்கு காரணம். அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்தால் அதன் மூலம் அ.தி.மு.க.விற்கு ஒரு 500, 1000 ஓட்டு கிடைக்கும். அது எங்களுக்கு நல்லது தானே. 500 ஓட்டுக்கள் வைத்திருக்கும் ம.தி.மு.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருக்கும்போது நாங்கள் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்தால் என்ன தப்பு?. ஜெயலலிதா ஆட்சி சூப்பர். எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ சூப்பரோ சூப்பர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story