தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்கும் எண்ணம் இல்லை தங்கதமிழ்செல்வன் பேட்டி
நடிகர் கமல்ஹாசன் அ.ம.மு.க.வுடன் கூட்டணி சேர்வாரா என்பது பற்றி தெரியவில்லை. தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்கும் எண்ணம் அ.ம.மு.க. இல்லை.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பேரறிவாளன் உள்பட 7 பேரை சட்டப்படி விடுதலை செய்ய வேண்டும். கவர்னர் தாமதம் செய்வதை தட்டிக்கேட்கும் துணிச்சல் அ.தி.மு.க. அரசுக்கு இல்லை. பிரதமர் மோடி 4½ ஆண்டுகளுக்கு பிறகு சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியதற்கு வாழ்த்துகள். பத்திரிகையாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியது தவறு. அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி தொடர்பாக பேசினால் கிண்டல் தான் செய்வார்கள். ஒரே நிலைப்பாட்டுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்க வேண்டும்.
நடிகர் கமல்ஹாசன் அ.ம.மு.க.வுடன் கூட்டணி சேர்வாரா என்பது பற்றி தெரியவில்லை. தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்கும் எண்ணம் அ.ம.மு.க. இல்லை. பா.ம.க., தே.மு.தி.க. ஜெயலலிதாவை கிண்டல் செய்து விமர்சனம் செய்தவர்கள். இந்த 2 கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைப்பது கவலை அளிக்கிறது. தமிழகத்தில் அ.ம.மு.க. தான் முதல் அணி என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story