மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு ”பேட்டரி டார்ச்” சின்னம் : தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு


மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு ”பேட்டரி டார்ச்” சின்னம் : தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 10 March 2019 10:14 AM IST (Updated: 10 March 2019 11:18 AM IST)
t-max-icont-min-icon

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட உள்ளது. இதற்காக, தேர்தலில் போட்டியிட  விரும்புபவர்களிடம் இருந்து கமல்ஹாசன் விருப்ப மனுக்களை பெற்று வருகிறார்.  


இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்காக  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் சின்னம் ஒதுக்கியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ள கமல்ஹாசன், ”மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் மிகவும் பொருத்தமானது எனவும்,  தமிழகத்தில் புதிய சகாப்தத்திற்கும், இந்திய அரசியலுக்கும் பேட்டரி டார்ச் சின்னம் புதிய ஒளி பாய்ச்சும் என்றும்” தெரிவித்துள்ளார். 

Next Story