அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஓ.பன்னீர்செல்வம் - விஜயகாந்த் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
அ.தி.மு.க. கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் தே.மு.தி.க. இணைந்தது. அந்த கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் ஓ.பன்னீர்செல்வம் - விஜயகாந்த் முன்னிலையில் கையெழுத்தானது.
சென்னை,
அ.தி.மு.க. கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் தே.மு.தி.க. இணைந்தது. அந்த கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் ஓ.பன்னீர்செல்வம் - விஜயகாந்த் முன்னிலையில் கையெழுத்தானது.
நாடாளுமன்ற தேர்தல்
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மேல்-சபை இடமும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், மற்ற 3 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த கூட்டணியில் தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளை சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் தரப்படும் என்று அ.தி. மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பா.ம.க.வுக்கு நிகராக தங்களுக்கும் 7 தொகுதிகள் ஒதுக் கீடு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை பொதுச்செயலாளர் சுதீஷ் ஆகியோர் விடாப்பிடியாக இருந்தனர். இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.
தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்று அ.தி.மு.க. தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வேறு வழியின்றி அ.தி.மு.க. கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டது.
எனவே அ.தி.மு.க- தே.மு. தி.க. இடையே நேற்று கூட்டணி உடன்பாடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே இரண்டு கட்சிகள் இடையே கூட்டணி ஒப்பந்தம் ஆனது. இதற்கான ஏற்பாடுகள் நேற்று மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் செய்யப்பட்டிருந்தது.
4 தொகுதிகள் ஒதுக்கீடு
அங்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை பொதுச்செயலாளர் சுதீஷ் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது ஏற்கனவே எதிர்பார்த்தது போன்று தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதே ஓட்டலில் தான் பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சி களுடன் அ.தி.மு.க. கூட்டணி உடன்பாட்டை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
த.மா.கா.வுடன் இன்று பேச்சுவார்த்தை
அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வும் நேற்று இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், த.மா.கா. நிர்வாகிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
அதனால், இன்று (திங்கட்கிழமை) த.மா.கா.வுடனான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிகிறது. அக்கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story