சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் அதிகாரி உத்தரவு


சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 11 March 2019 10:42 AM IST (Updated: 11 March 2019 10:42 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  தமிழக தேர்தல் அன்று மதுரையில் சித்திரை தேர் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.  

விழா பற்றி தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே தெரியப்படுத்தினீர்களா? எனவும் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி பதிலளிக்க, சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். 


Next Story