திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கு: விரைந்து தீர்ப்பு வழங்க பரிசீலிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்


திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கு: விரைந்து தீர்ப்பு வழங்க பரிசீலிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்
x
தினத்தந்தி 11 March 2019 11:37 AM IST (Updated: 11 March 2019 11:37 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க பரிசீலிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை,

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. 

வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என மனுதாரர் சரவணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க பரிசீலிக்கப்படும் என்று 
 தெரிவித்துள்ளது.

ஏ.கே.போஸ் வெற்றிக்கு எதிராக சரவணன் தொடர்ந்த வழக்கில் கடந்த நவம்பரில் உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story