3 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மக்களவை தேர்தலுடனேயே சேர்த்து தேர்தல் நடத்திட வேண்டும் - திமுக தீர்மானம்
அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மக்களவை தேர்தலுடனேயே சேர்த்து தேர்தல் நடத்திட வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை,
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில்,
* 18 தொகுதிகளுடன் மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும்.
* வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் அறிவிக்கப்படவில்லை என கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை.
* அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடத்த வேண்டும்.
* ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்ற தீர்ப்பால் இறுதிக்கு வந்து விட்டது.
* 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன் வராவிட்டால், நீதிமன்றம் மூலம் இந்த 3 தொகுதிகளின் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story