மாநில செய்திகள்

நிர்மலா தேவியை நாளை பிற்பகல் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு + "||" + The High Court ordered the Madurai to produce Nirmala Devi tomorrow afternoon

நிர்மலா தேவியை நாளை பிற்பகல் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நிர்மலா தேவியை நாளை பிற்பகல் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
நிர்மலா தேவியை நாளை பிற்பகல் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

சிபிஐ விசாரணை கோரும் வழக்கில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியை நாளை பிற்பகல் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

நிர்மலாதேவி தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   நிர்மலா தேவி தொடர்பான வழக்குகளும், அவருடைய ஜாமீன் வழக்குகளும் நாளை விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிர்மலா தேவி விவகாரத்தில் 3 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். உரிய விசாரணை நடைபெறவில்லை என மனுதாரர் விளக்கம் அளித்துள்ளார்.

நிர்மலா தேவிக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க முடியவில்லை  என நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சுகந்தி என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை நாளைக்கு ஒத்திவைத்தது.

தொடர்புடைய செய்திகள்

1. 2-வது முறையாக மொட்டை அடித்தபடி ஆஜரான நிர்மலா தேவி
வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக வேண்டி நிர்மலா தேவி 2 வது முறையாக மொட்டையடித்தபடி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2. நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து தியானம் செய்த நிர்மலாதேவி
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
3. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் ஆஜராகி நிர்மலா தேவி விளக்கம் அளித்துள்ளார்.