பொள்ளாச்சி பலாத்கார சம்பவம் : சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு தமிழக பா.ஜனதா வலியுறுத்தல்


பொள்ளாச்சி பலாத்கார சம்பவம் : சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு தமிழக பா.ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 March 2019 6:06 PM IST (Updated: 11 March 2019 6:06 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை காதல் என வலைவீசி கொடூரமான முறையில் நடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடூரங்களை ஒரு கும்பல் நிகழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக  சபரிராஜன் (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை போலீஸ் கைது செய்தது. இச்சம்பவம் தொடர்பான அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகியுள்ளது. பெண்களை புழுவாக துடிக்க வைத்து வீடியோ எடுத்த இவன்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. போராட்டங்களும் நடைபெறுகிறது.

இச்சம்பவத்தில் கடும் நடவடிக்கையை போலீஸ் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதற்கிடையே  பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பா.ஜனதா தலைவர் தமிழிசை டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்  “பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது,பெண்ணினம் கசக்கப்படுவதையும்.. நசுக்கப்படுவதையும்.. துளியும்,ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, பாதிக்கப்பட்டபெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும, சரியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், சிறப்பு புலனாய்வு வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 

Next Story