பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் மறுப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி,
தமிழகத்தை உலுக்கியுள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த பொள்ளாச்சி நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உட்பட 4 பேர் மீது ஏற்கனவே, காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்ட நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story