நிர்பயாவுக்கு தந்த முக்கியத்துவம் பொள்ளாச்சி சம்பவத்துக்கு தராதது ஏன்? நீதிபதிகள் வேதனை


நிர்பயாவுக்கு தந்த முக்கியத்துவம் பொள்ளாச்சி சம்பவத்துக்கு தராதது ஏன்? நீதிபதிகள் வேதனை
x
தினத்தந்தி 12 March 2019 5:08 PM IST (Updated: 12 March 2019 6:23 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் வன்கொடுமை செய்யப்பட்ட நிர்பயாவுக்கு தந்த முக்கியத்துவம் பொள்ளாச்சி சம்பவத்துக்கு தராதது ஏன்? என்று ஊடகங்களின் பாகுபாடு குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரை,

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற  மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொள்ளாச்சி சம்பவம் குறித்து தங்களது வேதனையையும், கருத்தையும் நீதிபதிகள் பகிர்ந்து கொண்டனர்.

நிர்பயாவுக்கு தரப்பட்ட முக்கியத்துவம் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தரப்படவில்லை. தேசிய ஊடகங்கள் நகர்ப்புற பகுதிகளில் நடக்கும் சம்பவங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை, புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் நடக்கும் சம்பவத்துக்கு கொடுப்பதில்லை. குறிப்பாக தமிழகத்தை தேசிய ஊடகங்கள் புறக்கணிக்கின்றன என்றும், தேசிய ஊடகங்கள் ஊரகப் பகுதிகளை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்றும் நீதிபதிகள் தங்கள் கருத்தை முன் வைத்துள்ளனர்.

புதுடெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது அந்த சம்பவத்துக்கு உள்ளூர் ஊடகங்கள் முதல் தேசிய ஊடகங்கள் வரை முக்கியத்துவம் கொடுத்ததும், மருத்துவமனை வாசலில் நின்று சில தொலைக்காட்சிகள் நேரலை ஒளிபரப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story