இந்து கடவுளை விமர்சனம் செய்த விவகாரம்: வழக்கை ரத்து செய்ய கோரிய பாரதிராஜா மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


இந்து கடவுளை விமர்சனம் செய்த விவகாரம்: வழக்கை ரத்து செய்ய கோரிய பாரதிராஜா மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 March 2019 4:30 AM IST (Updated: 13 March 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

இந்து கடவுளை விமர்சனம் செய்த வழக்கை ரத்து செய்ய கோரிய பாரதிராஜா மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை,

ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதிய கட்டுரையை கண்டித்து, அவருக்கு எதிராக இந்து அமைப்பினர் கடுமையான கண்டன கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து சென்னையில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்ட சினிமா இயக்குனர் பாரதிராஜா, ‘வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால், தலையை எடுக்கவும் தயங்கமாட்டேன்’ என்று ஆவேசமாக பேசினார். மேலும் அவர், இந்து கடவுளையும், விநாயகரை இறக்குமதி கடவுள் எனறும் விமர்சனம் செய்தார்.

இதுகுறித்து, இந்து மக்கள் முன்னணி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பாரதிராஜா மீது வழக்கு தொடரப்பட்டது.

அதில் இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தினார் என்பது உள்பட பல சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் பாரதிராஜா மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாரதிராஜா மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story