தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க சென்னை வந்தார் ராகுல்காந்தி


தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க சென்னை வந்தார் ராகுல்காந்தி
x
தினத்தந்தி 13 March 2019 10:49 AM IST (Updated: 13 March 2019 10:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்தார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த பிரமாண்ட கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில்,  தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்தார். நாகர்கோவிலில் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

Next Story