காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் தருவோம் - ராகுல்காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் தருவோம் என்று மாணவிகளின் கேள்விக்கு ராகுல்காந்தி பதில் அளித்தார்.
சென்னை,
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
சேஞ்ச் மேக்கர்ஸ் என்ற தலைப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உரையாடினார்.
கல்லூரியில் மாணவிகள் மத்தியில் ராகுல்காந்தி பேசியதாவது:
என் மனதில் உள்ள கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன். இந்தியாவில் கல்விக்காக கூடுதலாக நிதி செலவிடப்பட வேண்டும். தற்போது குறைந்த நிதியே செலவிடப்படுகிறது. ஜிஎஸ்டி முறையில் மாற்றம் கொண்டு வரப்படும். குறைந்த வரி நிர்ணயம் செய்யப்படும்.
பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென் இந்தியா சிறந்து விளங்குகிறது. பெண்களை இரண்டாம் நிலையாக கருதாமல் சமநிலை என்றே கருத வேண்டும். மத்திய அரசு வேலைவாய்ப்பில் பெண்களுகு 33% இட ஒதுக்கீடு அளிக்கப்படும். பெண்களை தென்னிந்தியா சிறப்பாக நடத்துகிறது .
ராகுல்காந்தியிடம் கல்லூரி மாணவிகள், ரபேல் விவகாரம், பயங்கரவாதம், கல்வி, ஜம்முகாஷ்மீர் பிரச்சனை, ஜிஎஸ்டி உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர் மாணவிகளின் கேள்விக்கு ஏற்றவாறு ராகுல்காந்தி பதில் அளித்தார்.
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும் . அனில் அம்பானி ஒருபோதும் விமானங்கள் தயாரித்தது கிடையாது.
குறிப்பிட்ட ஒருவரை மட்டுமே குறிவைத்து சட்டத்தை செலுத்தக்கூடாது. யாரையும், எவரையும் விசாரிக்க அரசுக்கு உரிமை இருக்கிறது.
ராபர்ட் வதேரா குறித்து ராகுலிடம் கல்லூரி மாணவி கேள்வி எழுப்பினார்.
எதனடிப்படையில் எச்.ஏ.எல்.ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு அனில் அம்பானிக்கு தர வேண்டும்?
எத்தனை முறை பிரதமர் மோடி இது போல நின்று மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்?
நாட்டின் வளர்ச்சிக்கு எது தடையாக இருக்கும் என மாணவி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ராகுல், நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய தடையாக இருப்பது ஊழல் தான் என்றார்.
அனைவரும் ஒற்றுமையாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். வடக்கு தெற்கையும், தெற்கு வடக்கையும் போட்டியாக நினைக்காமல் இணைந்து முன்னேற வேண்டும்.
பயங்கரவாதத்தை ஒழிக்க காங்கிரஸ் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்? மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார்.
2004-ல் காங்கிரஸ் ஆட்சியின் போது காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. காஷ்மீர் இளைஞர்களை நாட்டின் மற்ற இளைஞர்களோடு இணையச்செய்வதன் மூலம் தீவரவாதத்தை குறைக்க முடியும்.
மக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், பயங்கரவாதத்தை தடுக்க முடியும். பஞ்சாயத்து ராஜ் சட்டம் மூலம் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலை நடத்தினோம். அதற்கு முன்பு இருந்த வாஜ்பாய் அரசின் தவறான நடவடிக்கைகளால் இந்த நிலை இருந்தது.
இந்திய பிரதமரை காஷ்மீர் மக்கள் நேசிக்கும் நிலை ஏற்பட வேண்டும். காஷ்மீர் பிரச்சனை குறித்து எனக்கு போதிய அளவில் அனுபவம் உள்ளது. பாலின சமத்துவத்தில் வடமாநிலங்களை காட்டிலும், தென் மாநிலங்கள் சிறந்த அளவில் உள்ளது.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
Related Tags :
Next Story