தே.மு.தி.க வேட்பாளர்கள் யார்?: மூன்று தினங்களுக்குள் அறிவிப்பு - பிரேமலதா


தே.மு.தி.க வேட்பாளர்கள் யார்?: மூன்று தினங்களுக்குள் அறிவிப்பு - பிரேமலதா
x
தினத்தந்தி 13 March 2019 3:37 PM IST (Updated: 13 March 2019 3:37 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 தொகுதிகள் எவை என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை,

கடும் இழுபறிக்கு பிறகு அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று  காலை 10 மணிக்கு வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்.  அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 தொகுதிகள் எவை என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தே.மு.தி.க வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் மூன்று, நான்கு தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என்றார்.

தே.மு.தி.க.வுக்கு கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவள்ளூர் (தனி) ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

Next Story